திங்கள், 12 ஏப்ரல், 2010

புத்தளம் நகரசபை தலைவரின் வீட்டை தாக்க முயற்சி!!

புத்தளம் நகரசபைத்தலைவர் எம்.என்.எம்.நஸ்மியின் வீட்டின் மீது நடத்த வந்தகும்பலை கலைக்க பாதுகாப்பு கடமையில் இருந்தபொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை விரட்டியடித்துள்ளனர் இச்சம்பவம் இன்று அதிகாலை புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம் ஜாவுசன் பள்ளி வீதியில் அமைந்துள்ள நகரசபை தலைவரின் வீட்டை நோக்கி அதிகாலை 2.30மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் தலைவரின் வீட்டுக்கு நுழைய முயற்சித்துள்ளனர். வந்த கும்பல் உரத்த குரலில் சத்தமிட்டதை அறிந்துக் கொண்ட நகசைபை தலைவரின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றும் பொலிஸார் தாக்குதல் நடத்த வந்த கும்பலை வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரித்தும் அதனைப் பொருட்படுத்தாது வீட்டுக்குள் நுழைய முற்படுகையில் பொலிஸார் மேல்நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது இச்செய்தி கிட்டியதும் புத்தளம் பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்து உரிய மேலதிக பாதுகாப்பினை வழங்கியுள்ளனர் இதுகுறித்து புத்தளம் நகரசபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார். இதேவேளை நகரசபைத் தலைவர் எம்.என்.எம்.நஸ்மிக்கும் முன்னாள் கால்நடைகள் பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ_க்கும் நீண்டகாலமாக பனிப்போர் ஒன்று இடம்பெற்று வருவது சுட்டிக் காட்டதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக