யாழ். சுழிபுரம் கிழக்கு திசைமழை கண்ணகியம்மன் கோவில் புனருத்தாபன நிதியாக ஒரு லட்சம் ரூபாய் (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் மாகாண சபை நிதியொதுக்கீட்டில் இருந்து மேற்படி ஒரு லட்சம் (100,000) ரூபாய் இவ் ஆலயத் திருப்பணிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதிக்குரிய காசோலையினை புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திசைமழை கண்ணகியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரிடம் நேற்றையதினம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், ஆலய அறங்காவலர் சபையினரும் பங்கேற்றிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக