திங்கள், 12 ஏப்ரல், 2010
நாவலப்பிட்டியில் ஐ.தே.கட்சி முக்கியஸ்தர் ஒருவருக்கு அச்சுறுத்தல்
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் ஹாஜியார் நேற்று தனிப்பட்ட காரணமொன்றுக்காக நாவலப்பிட்டி சென்றிருந்த போது பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதனை அறிந்த குறிப்பிட்ட அரசியல்வாதி சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து காதர் ஹாஜியாரிடம் தமது ஆதரவாளர் சார்பாக மன்னிப்புக் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் மீள்வாக்கின் போது கெஹெலிய, சரத்அமுனுகம, எஸ்பி, ஐக்கிய தேசிய கட்சி மக்கள் விடுதலை முன்னணிக்கெதிராக பிரதேச மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வாசனங்கள் சுவரொட்டிகள் நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக