ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 45 மாகாணசபை உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு

45 மாகாணசபை உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 45 மாகாணசபை உறுப்பினர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வெற்றிடங்களுக்கு விருப்புவாக்கு அடிப்படையில் அடுத்த நிலைகளைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் மாகாணசபைகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். மேல், தென், வடமேற்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இவ்வாறு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். துமிந்த சில்வா, திலங்க சுமதிபால, ரெஜினோல்ட் குரே, விதுர விக்ரமநாயக்க, நிசாந்த முத்துஹெட்டிகம, சஜின் வாஸ் குணவர்தன, ரோஹண புஸ்பகுமார உள்ளிட்ட ஆளும் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் மாகாணசபையிலிருந்து பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ரோசி சேனநாயக்க, மொஹான் லால் க்ரேரு, மனுஷ நாணயக்கார, பழனி திகாம்பரம், சுஜீவ சேனசிங்க, பிரபா கணேசன் போன்ற மாகாணசபை உறுப்பினர்கள் எதிர்க்கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக