ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 1071பேர் மீள்குடியமர்வு

இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் ஒரு தொகுதியினர் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். ஆறு நலன்புரி நிலையங்களிலிருந்து 441 குடும்பங்களைச் சேர்ந்த 1071 பேர் நேற்று முன்தினம் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக மீள்க்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. செட்டிகுளம் வலயம் பூச்சியமான கதிர்காமர் நலன்புரி நிலையத்திலிருந்து 42 குடும்பங்களைச் சோந்த 128 பேர் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு தெற்கு, முள்ளியவளை மத்தி, கள்ளப்பாடு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். வலயம் ஒன்றான ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்திலிருந்து 193 குடும்பங்களைச் சோந்த 299பேர் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் முள்ளியவளை பகுதிக்கு குடியேற்றப்பட்டுள்ளனர். வலயம் இரண்டான இராமநாதன் நலன்புரி நிலையத்திலிருந்து 71 குடும்பங்களைச் சோந்த 220பேர் முல்லைத்தீவு, முள்ளியவளை மத்தி, கள்ளப்பாடு வடக்கு, வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். மூன்றாம் வலயமான அருணாச்சலம் நலன்புரி நிலையத்தில் இருந்து 59 குடும்பங்களைச் சோந்த 180பேர் முல்லைத்தீவு கறுத்துறைப்பற்றிற்கு மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். வலயம் நான்கிலிருந்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 186பேரும் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு தெற்கு, முள்ளியவளை மத்தி, ஆகிய பகுதிகளில் குடியேற்றப் பட்டுள்ளனர். இவர்களைத் தவிர வலயம் 6இலிருந்து 19 குடும்பங்களைச் சோந்த 58பேர் வற்றாப்பளைக்கு மீளக்குடியேற்றப் பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக