வியாழன், 25 மார்ச், 2010

தபால்மூல வாக்களிப்பின்போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் ஆயுதங்களைக் கொண்டுசெல்ல தடை..!

தபால்மூல வாக்களிப்பின்போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் ஆயுதங்களைக் கொண்டுசெல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தபால்மூல வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நடைபெறவுள்ள தபால்மூல வாக்களிப்பில் 04லட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏழாவது நாடாளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 08ம்திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இம்முறை பொதுத்தேர்தல் கடமையில் 03லட்சத்திற்கும் திகமான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஜனாதிபதித் தேர்தலைவிட 50ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக