புதன், 10 டிசம்பர், 2014

சுன்னாகம் ஐயன்னா சனசமூக நிலைய முன்பள்ளியின் கலைவிழாவும், வழியனுப்பு விழாவும்(Photos).

யாழ். சுன்னாகம் மேற்கு ஐயன்னா சனசமூக நிலைய முன்பள்ளியின் கலைவிழாவும், மேற்படி முன்பள்ளியில் பயின்று முதலாம் வகுப்புக்கு செல்லும் பிள்ளைகளுக்கான வழியனுப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (07.12.2014) காலை 9மணியளவில் முன்பள்ளியின் தலைவர் திரு பிறேம்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக கலாநிதி சி.குகநேசன் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும் சிறப்பு விருந்தினராக முநவலோகராஜா (உறுப்பினர், வலிதெற்கு பிரதேச சபை) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த முன்பள்ளியில் ஏறக்குறைய 60 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 20 பிள்ளைகள் முதலாம் வகுப்பிற்காக வேறு பாடசாலைகளுக்கு செல்கின்றார்கள். இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக முன்பள்ளியில் இணைந்து கொள்ளும் பிள்ளைகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பெருந்தொகையானோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக