புதன், 10 மார்ச், 2010

முல்லைத்தீவு, வவுனியா வேலைத்திட்டங்கள் தொட்பிலான கூட்டம்..!

வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த கூட்டம் முல்லைத்தீவிலும் வவுனியாவில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலணி துரித அபிவிருத்தி திட்டத்தின் சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். வீதிகள், கல்வி, சுகாதாரம், நீர்பாசனம், வீடமைப்பு, விவசாயம் போன்ற முக்கிய விடயங்களின் அபிவிருத்தி குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு அரசஅதிபர் தலைமையிலும் நேற்று வவுனியா அரசஅதிபர் தலைமையிலும் இந்த உயர்மட்ட முக்கியத்தும் வாய்ந்த கூட்டங்கள் நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் சகல அரச கட்டிடங்களும் புதிதாகவே நிர்மாணிக்கப்படவுள்ளது இதற்குரிய செயல்திட்ட அறிக்கை தயாரிக்குமாறு அரச அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டபோதிலும் அதிலும் சில திருத்தங்கள் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதி வடக்கு துரித செயலணியின் மூலம் வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக