புதன், 10 மார்ச், 2010

பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்..!!

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாண த்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது. இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக