செவ்வாய், 9 மார்ச், 2010
வவுனியா வடக்கில் இருபத்தைந்து பாடசாலைகள் மீள ஆரம்பம்..!
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள 73 பாடசாலைகளில் 25 பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் அன்டன் சோமராஜா தெரிவித்தார். ஆயுதவன்முறை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு இயங்காத நிலையில் காணப்பட்ட போதிலும் நலன்புரி நிலையங்களில் தற்காலிக வகுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது வவுனியா வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றமையினால் அந்த பாடசாலைகள் தமது சொந்த இடங்களில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை வவுனியா வடக்கு கல்வி வலயம் மேற்கொண்டது. இந்தநிலையில் இதுவரையில் 25 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் நெடுங்கேணி கோட்டத்திலேயே அதிகளவான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக