சனி, 6 மார்ச், 2010
பொருட்களின் விலையேற்றத்திற்கு கடன் சுமையே காரணம் - பிரதமர்..!
புலிகளியக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கொன்றொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஏற்பட்ட கடன் தொகை நிலுவையில் உள்ள நிலையில் பொருட்களின் விலையை குறைக்கமுடியாது என இலங்கையின் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுத தளவாடங்களுக்காகவும் வெடிபொருட்களுக்காகவும் செலுத்தப்படவேண்டிய தொகை நிலுவையில் உள்ளதால் அதனை திருப்பி செலுத்தவேண்டும். அதனால் பொருட்களின் விலையை குறைக்கமுடியாது.அத்துடன் 'மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக' மற்றைய நாடுகளால் கொடுக்கப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. போர் தற்போது இல்லாவிட்டாலும் பணத்தை சேமிக்கவும் முடியாது. வரியைக் குறைத்து பொருட்களின் விலையையும் குறைக்கமுடியாது. இருக்கின்ற கடனை திருப்பி செலுத்தவேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். தற்போது 50 விழுக்காடு போரே முடிவடைந்துள்ளதாகவும், இன்னும் 50 விழுக்காடு போர் உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக