சனி, 6 மார்ச், 2010
சிறீபதி சூரியாராய்ச்சியின் மனைவி கட்சிதாவும் பணியில் மும்முரம்..!
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சியின் மனைவியுமான தில்ருக்ஷி கடந்த இரண்டு நாட்களாக கட்சிதாவும் பணியில் முன்முரமாக ஈடுப்பட்டு வருகின்றார். அவர் கடந்த 2ம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுமீது குற்றசாட்டுக்களை முன்வைத்து தனது கனவரின் அரசியலை அழித்தவர் மங்கள சமரவீர எனக்கூறி அக்கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இனைந்துக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பொறுப்பேற்று பொதுதேர்தலில் களமிறங்கிய அவர் கடந்த 4ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக