வெள்ளி, 12 மார்ச், 2010
வெளிநாடுகளில் புகலிடம் கோரும் இலங்கை அகதிகள் குறித்த சட்டதிட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது-ஐ.நா நிலையம்..!
வெளிநாடுகளில் புகலிடம் கோரும் இலங்கை அகதிகள் குறித்த சட்டதிட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிலையம் அறிவித்துள்ளது. அகதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் நிலையம் பின்பற்றிய கொள்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நடைமுறைகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரும் பலருக்கு புகலிடம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் ஆசட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பை அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களே அதிகளவில் அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக