வெள்ளி, 12 மார்ச், 2010

ஐ.நா செயலர் இலங்கை தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அணிசேரா நாடுகள்- எதிர்ப்பு..!

இலங்கை விடயம் தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அணிசேரா நாடுகள் அமைப்பு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்தறியாது பான் கீமூன், தன்னிச்சையாக நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது குறித்து விசனம் தெரிவித்துள்ள அவ்வமைப்பு இது குறித்து தமது அதிருப்தியை கடிதமூலம் தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடுசெய்ய ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அதிகாரம் கிடையாதெனவும், குறிப்பிட்ட சில நாடுகள்மீது மட்டும் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயோகித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக