வெள்ளி, 12 மார்ச், 2010

களனி சிறி விஷ்ணு தேவஸ்தானத்திற்கு ஜனாதிபதி விஜயம்..!

கம்பகா மாவட்டம் களனி தேர்தல் தொகுதி பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச களனியிலுள்ள பிரசித்தி பெற்ற சிறி விஷ்ணு தேவஸ்தானத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். தேவஸ்தான் பிரதம குருவினால் ஜனாதிபதிக்கு விசேட பூஜை அர்ச்சனைகள் செய்யப்பட்டு காளாஞ்சி வழங்கி ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் தமது விஜயத்தின் நினைவாக நாகமரக் கன்று ஒன்றினையும் தேவஸ்தான வளாகத்தில் ஜனாதிபதி நாட்டி வைத்தார். இந்நிகழ்வுகளில் களனி தொகுதி அமைப்பாளர் கலாநிதி மேர்வின் சில்வாவும் பங்குகொண்டார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்றது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது ஜனாதிபதி பங்கேற்கும் 24 பிரதான கூட்டங்கள் சகல மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளன. குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் தலா இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும். இது தவிர பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்கவின் தலைமையிலும் மாவட்ட மட்டத்தில் பிரதான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐ.ம.சு.மு. தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் தேர்தல் தொகுதி மட்டத்திலான கூட்டங்கள் வாக்குச் சாவடி மட்டத்திலான கூட்டங்கள் கிராம மட்டத்திலான கூட்டங்கள் என பல்வேறு மட்டங்களில் தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்படவூள்ளன எனவும் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக