வியாழன், 18 மார்ச், 2010

தனுனவுக்கு எதிராகப் பிடியாணை : நீதிமன்றம் இன்று தெரிவிப்பு..!!

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவுக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. ‘ஹைகோப்’ விசாரணை இன்று நீதிமன்றத்தில் ஆரம்பமான போது தனுன திலகரத்ன இன்னமும் இலங்கையில்தான் தலைமறைவாக உள்ளார் என்று இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்வதற்காக, தான் வெளிநாட்டில் உள்ளதாகப் பொய் வதந்திகளை தனுன பரப்பிவருகிறார் என்றும் இரகசியப் பொலிஸார் நீதின்றில் குற்றஞ்சாட்டினர். இதனையடுத்தே தனுனவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக