வியாழன், 18 மார்ச், 2010
பாதுகாப்புச் செயலாளர் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார்..!
இலங்கை நிர்வாகத்துறையினரோ அல்லது பாதுகாப்பு துறையினரோ இலங்கை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனச் சட்டமுள்ளது. இச்சட்டத்தை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா மீறி செயற்பட்டார் என்பது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஒருமுக்கிய குற்றச்சாட்டு இந்நிலையில் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தேர்தல் மேடைகளில் முக்கிய பேச்சாளராக உருவாகி வருவது எந்தவகையில் நியாயமானது என தெரியவில்லை என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 14ம்திகதி கொழும்பில் நடந்த 9பிரச்சாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் துமிந்த சில்வா சார்பில் மேடைகளில் தோன்றி துமிந்த சில்வாவுக்கே மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தை துமிந்த சில்வாவின் சகோதரர் நடத்தும் ஹிரு எப்.எம் சேவையின் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியுள்ளன. இந்த வானொலியின் செய்திகளில் குறிப்பி;ட்டதன்படி கோத்தபாய ராஜபக்ஷ கொலன்னாவையில் 3கூட்டங்களிலும் ஹோமாகமவில் 2கூட்டங்களிலும் மற்றும் மஹரகம கெஸ்பாவ கொழும்பு வடக்கு மற்றும் கோட்டையில் ஒவ்வொரு கூட்டங்களிலும் பேசியுள்ளார். எவ்வாறெனினும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டுள்ள சட்டங்களை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரயோகிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நடப்பு ஜனாதிபதியின் சகோதரர் என்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக