வெள்ளி, 5 மார்ச், 2010

நிவாரணக்கிராமங்களில் தங்கியிருந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் மீளக்குடியேற்றப்பட்டு விட்டனர். - கிளி. அரச அதிபர் தெரிவிப்பு..!!

கடந்தகால யுத்த அனர்த்தங்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக்கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியிருந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் மீளக்குடியேற்றப்பட்டு விட்டனர். இத்தகவலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி தெரியப்படுத்தி உள்ளார். இதுகுறித்து மேலும் தகவல் தெரிவித்த அரசாங்க அதிபர் தற்சமயம் நிவாரணக்கிராமங்களில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் எவருமே இல்லை எனவும் நேற்றையதினத்துடன் (04.03.2010) கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்குள் உள்ளடங்கியுள்ள கரைச்சி பூநகரி கண்டாவளை பளை ஆகிய உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலேயே இடம்பெயர்ந்த அனைவரும் மீளக்குடியேற்றப்பட்டுள்ளதுடன் அம்மக்களுக்கு உடனடி நிதி நிவாரணம் வங்கிவைப்பு உட்பட குறிப்பிட்ட காலத்திற்கு உலர் உணவு நிவாரணம் என்பனவும் கிரமமாக வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக