செவ்வாய், 16 மார்ச், 2010
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சியைப் போன்றே ஊழலை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கப்படும் -பாதுகாப்புச் செயலாளர்..!!
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளின்போது ஒத்துழைப்பு வழங்கியதனைப் போன்றே ஊழல் மோசடிகளை ஒழிக்கவும் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது அன்றாட வாழ்க்கையை கிரமமாக முன்னெடுக்க ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஊழல் மோசடியற்ற நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் காவல்துறையினர் மக்களைவிட்டு விலகிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் காவல்துறையினர் மக்களை விட்டு விலகியுள்ளதாகவும் மீண்டும் மக்களின் நண்பர்களாக காவல்துறையினர் மாறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளை இல்லாதொழிக்க முடியாதென முழுஉலகமுமே கருத்து வெளியிட்ட போது அரசாங்கம் நிலையான கொள்கையொன்றின் மூலம் புலிகளை தோற்கடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக