செவ்வாய், 16 மார்ச், 2010

இன, மத, பேதங்களைத் தூண்டும் சக்திகளை தோற்கடிக்க மக்கள் அணி திரள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ..!!

குறுகிய அரசியல் இலாபங்களைக் கருத்திற்கொண்டு தேர்தல் என்ற போர்வையில் மீண்டும் நாட்டில் இன, மத, குல பேதங்களைத் தூண்டிவிட சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அந்நோக்கங்களைத் தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் ஒன்று திரள வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். விருப்பு வாக்கு மோதல்களைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து செயற்படக் கூடிய காலம் உருவாகியுள்ளதென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று அம்பாந்தோட்டை மாவட்டத் திலுள்ள சாகல ரஜமஹா விகாரையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் மேலும் உரை யாற்றிய ஜனாதிபதி: நாட்டின் அபிவிருத்தியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நாட்டு மக்களின் உளரீதியான அபிவிருத்தி மிக முக்கியமானது.
கடந்த காலங்களில் பிளவுபட்டு புலிகளுக்கு உரித்தாகியிருந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களை மீட்டு, ஒன்றிணைக்க எம்மால் முடிந்துள்ளது. மனிதாபிமான நடவடிக்கைகள் நடைபெற்ற காலங்களிலும் நாம் நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்தோம். கடந்த காலங்களில் பாதைகளை, வாய்க்கால்களை அமைப்பதற்கும் யுத்தத்தை காரணங்காட்டி வந்துள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களில் நாம் நாட்டை ஒன்றிணைத்ததோடு முழு நாட்டையும் அபிவிருத்திக்குள் ளாக்கும் செயற்திட்டங்களை ஆரம் பித்துள்ளோம். கொங்கிரீட் பாதைகள், குடிநீர் வசதிகள் மட்டுமன்றி எதிர்கால த்திற்குத் தேவையான மின்சாரத் தைப் பெற்றுக்கொள்ளவென நுரைச்சோலை, மேல் கொத்மலை போன்ற பாரிய மின் உற்பத்தித் திட்டங்களையும் நடைமுறைப் படுத்தியுள்ளோம்.
ஒரே தடவையில் ஐந்து துறை முகங்களின் நிர்மாணப் பணிகள் நடைபெறுகின்றன. இத்துறைமுகங் கள் செயற்படத் தொடங்கியதும் நாட்டின் கைத்தொழிற்றுறைகளில் அபிவிருத்தி ஏற்படும். நாம் நாட்டின் சகல பிரதேசங் களிலுமுள்ள பிரதேச பாதைகளை அபிவிருத்தி செய்ததன் மூலம் இன்று எங்கும் சென்று வரக்கூடிய வழிபிறந்துள்ளது. அதே போன்று அம்பாந் தோட்டை மாவட்டத்திலும் துறை முகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டு மைதானம் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமக்கு சிறந்த எதிர்கால சந்ததி அவசியம். அதனைக் கருத்திற் கொண்டே சகல நடவடிக்கைக ளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த பயணத்திற்கு வலுவூட்டும் மக்களுக்கு நாம் நன்றி கூறக் கடமை ப்பட்டுள்ளோம். எமக்குப் பலமான பாராளுமன்றமொன்று அவசியம். வடக்கு கிழங்கை மீள இணைத்து தனி ராஜ்யமொன்றை ஏற்படுத்த வென புலிகளின் ஆதரவாளர்களாகச் செயற்படுபவர்களுக்கு இந்த நாட் டைக் காட்டிக்கொடுக்க முடியாது. பலமான பாராளுமன்றத்தை அமைக்க நாம் அனைவரும் ஒன்றி ணைந்து அர்ப்பணிப்புடன் செயற் பட வேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பலமான பாராளுமன்றம் அவசியம்; ஆனால் பாரிய அமைச்சரவை எமக்கு அவசியமில்லை. இந்நாட் டைக் கட்டியெழுப்பும் சக்தி மிக்கோரே எமக்குத் தேவை. அதற்காக புதிய இளைஞர்கள் ஒன்றி ணைந்துள்ளனர். அவர்களையும் இணைத்துக் கொண்டு நாம் இப்பயணத்தைத் தொடர்வோம் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக