புதன், 17 மார்ச், 2010

முல்லை - யாழ். - கிளிநொச்சி தனியார் பஸ் சேவையை ஆரம்பிக்க அனுமதி..!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் முல்லைத்தீவு - யாழ்ப்பாணத்திற்கென ஆறு தனியார் பஸ் சேவைகளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 10 தனியார் பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவு பெற்றதன் பின்னர் பஸ் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். அத்துடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கென தனித்தனியான சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிமனையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பேரூந்துக் கழக உறுப்பினர்களது கலந்துரையாடல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக