புதன், 17 மார்ச், 2010

உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு அறிவிப்பு..!

இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்சக் கட்ட சண்டையில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும், சுட்டுக் கொன்று விட்டதாக அறிவித்த சிங்களராணுவம் பிரபாகரன் தோற்றத்தில் இருந்த ஒரு உடலையும் காட்டியது.ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதனால் பிரபாகரன் விஷயத்தில் சர்ச்சை நீடிக்கிறது.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பொட்டு அம்மான். இவர் தப்பிச்சென்று விட்ட தாக தகவல்கள் வெளியானது. சிங்கள ராணுவ அதிகாரிகளும், பொட்டு அம்மான் உடல் கிடைக்காததால் அவர் உயிர் தப்பி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.பொட்டு அம்மான் இலங்கையில் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று மற்றொருதகவல் வெளியானது. ஆனால் பிரபாகரன் பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட விடுதலைப்புலிகள் பொட்டு அம்மான் பற்றி எதுவும் தகவல் வெளியிடவில்லை.இந்த நிலையில் கடந்தடிசம்பர் மாதம் முதல் பொட்டு அம்மானையும் அவரது உதவியாளர்கள் 2 பேரையும் சர்வதேச போலீசார் தேடத் தொடங்கினார் ள். இது தொடர்பாக சர்வதேச போலீசார் இணையத் தளங்களிலும் அறிவிப்பு வெளியிட்டனர். இது இலங்கை சிங்கள அரசுக்கு நெருக்கடியை கொடுத்தது.பிரபாகரனின் மரணச்சான்றிதழை தயாரித்து கொடுத்து விட்ட சிங்கள அரசுக்கு பொட்டு அம்மான் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்று சான்றிதழ் கொடுப்பது என்று சிங்கள அதிகாரிகள் திணறினார்கள். இதற்கிடையே ராஜீவ்கொலையில் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை இந்தியா கேட்டு வலியுறுத்தியது.சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்ததால் தற்போது இலங்கை அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதியுத்தம் நடந்த போது பொட்டு அம்மான் தன் உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் மனைவியும் அது போல தற்கொலை தாக்குதல் மூலம் தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.பொட்டு அம்மான், உடலை மீட்க முடியவில்லை என்றும் இலங்கை அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரண மாகத் தான் பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழைக் கொடுக்க இயலவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.இதற்கிடையே பொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா உளவு அமைப்பான ரா சந்தேகம் தெரிவித்துள்ளது. கேட்டுக் கொண்டதால் சர்வதேச போலீசார் பொட்டு அம்மானை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிகவாய்ப்புகள் உள்ளதாக உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். சிங்கள அரசுக்கு இது கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக