புதன், 17 மார்ச், 2010

நாட்டின் தற்போதைய சட்டங்கள் மக்களின் நலனுக்காகவே நடைமுறைபடுத்த வேண்டும்- பிரதமர்..!

நாட்டின் தற்போதைய சட்டங்கள் மக்களின் நலனுக்காகவே நடைமுறைபடுத்த வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரனையில் நேற்றுக்காலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். ஹொரன அடவாங்கொட ஆரம்ப பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்hட்ட கணனி பிரிவை ஆரம்பித்துவைக்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், நகரப்புற பாடசாலைகளுக்கு கிடைக்கும் வளங்கள் போன்று கிராமபுற பாடசாலைகளுக்கும் கிடைக்கப்பெற செய்வது கடமை என இதன்போது தெரிவித்துள்ளார். சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்றால் நகரத்துக்கு செல்லவேண்டிய நிலைமை மாற்றப்பட்டு கிராமபுறங்களிலும் சிறப்பான கல்வியை பெற்றுகொள்ளும் வகையில் கிராமபுறங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக