திங்கள், 15 மார்ச், 2010

ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடே யுத்தத்தில் வெற்றியீட்டுவதற்கு காரணம் -லலித் வீரதுங்க..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான நிலைப்பாடே யுத்தத்தில் வெற்றியீட்டுவதற்கு காரணம் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணி என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது வெளிநாட்டு சக்திகளின் விமர்சனங்களை கண்டு ஜனாதிபதி மனம் தளரவில்லை என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மஹிந்த சிந்தனைக் கொள்கைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு ஆற்றிய விரிவுரையின்போது லலித்வீரதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரனின் தலைவிதியை அவரே தீர்மானிக்க வேண்டுமென நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிச் சொல்ஹெய்மிடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன விலை கொடுத்தேனும் புலிப் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பேன் என ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசப்பற்றுடைய நேர்மையான உள்நாட்டுத் தலைவர் ஒருவரினால் மட்டுமே இவ்வாறான உறுதியான நிலைப்பாட்டினை வெளிநாடுகளுக்கு சொல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நாடு பாரியளவு அபிவிருத்தியை எட்ட வேண்டுமாயின் நிச்சயமாக மஹிந்த சிந்தனைக் கொள்கைகளை எதிர்வரும் தசாப்தங்களில் பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக