திங்கள், 15 மார்ச், 2010
கருணா பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தரப்பின் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மனிதப் படுகொலைகள் மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் தெரிவிப்பு..!
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் அண்மையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 23 பக்க அறிக்கை ஒன்றை அண்மையி;ல் வெளியிட்டிருந்தது வடக்கு கிழக்கில் 300-400 பேர்வரை காணாமல் போயுள்ளதாகவும் கருணா பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தரப்பின் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மனிதப்படுகொலைகள் மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு கொழும்பிலிருந்து இயங்கிவரும் அரசசார்பற்ற நிறுவனமொன்றே தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக