திங்கள், 15 மார்ச், 2010

வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக்கூட்டங்கள் ஏற்பாடு..!

பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பங்கேற்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி கண்டியில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குருநாகல், கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா இரு கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் பிரதான கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இது தவிர பிரதமர் தலைமையிலும் நாடளாவியரீதியில் பிரதான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக