சனி, 6 மார்ச், 2010
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவோ இலங்கையின் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சந்தித்து பேச்சு..!!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவோ இலங்கையின் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிரூபமா ராவோ, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் நிரூபமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், என்ன விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்பது தொடர்பில் அவர் தெரிவிக்கவில்லை. அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று நிரூபமா ராவோ இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக