வெள்ளி, 26 மார்ச், 2010

கிழக்கின் அபிவிருத்திற்கும் இயல்பு நிலைக்கும் த.ம.வி.பு. வரவே வழிவகுத்தது..(வேட்பாளர். பாலகிருஸ்ணன்.)

வீராப்புப் பேசிப் பேசி எமது தமிழ் மக்களின் அரசியல் இருப்பிடத்தையே கேள்விக்குறியாக்கிய தமிழ்த் தலைவர்கள் மீண்டும் எம்மக்கள் முன்னிலையில் வாக்குக் கேட்டு படையெடுத்திருக்கின்றார்கள். இவர்களுக்கு எமது மட்டக்களப்பு தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். எத்தனையோ தமிழ் கட்சிகள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று உருவாகிய போதும் இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஓரளவு அபிவிருத்திற்கும், இயல்பு நிலைக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வரவே வழிவகுத்துது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.பாலகிருஸ்ணன் குறிப்பிட்டார்..
களுவன்கேணி நாகதம்பிரான் ஆலய முன்றலிலே கிராம மக்கள் மற்றும் கிராமிய பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த மேற்படி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்களுக்காகவே உதயமாகியிருக்கின்ற ஒரே ஒரு கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான். இக் கட்சியினை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் குறிப்பாக எமது கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட போது அம் மக்களுக்கு முகவரி கொடுத்த இக்கட்சியினை மக்கள் ஏற்று அதற்கு கடந்த உள்ளுராட்சி, மற்றும் மாகாண சபைத்தேர்தலில் ஆணை வழங்கி இருந்தீர்கள். எனவே ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மாத்திரமின்றி கிழக்கு தமிழ் மக்களுக்குமான ஓர் வரலாற்றுத் திருப்புமுனையாகும். எனவே எமது கட்சிதான் எம்மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையம் பற்றிப் பேசும், தற்போது மாகாணசபைகளினூடாகவும் பேசிக்கொண்டிருக்கின்றது. எனவே எங்களது கட்சியின் சின்னமான படகு சின்னத்திற்கு வாக்களிப்பதோடு எனது இலக்கமான 2ம் இலக்கத்திற்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி வைக்கமாறு தனது உரையில் கேட்டுக்கொண்டார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக