திங்கள், 1 மார்ச், 2010
கிளப்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மேஜர் கைது
பம்பலப்பிட்டியிலுள்ள கிளப் ஒன்றுக்கு சென்ற இராணுவ மேஜர் ஒருவர் அந்த கிளப்பின் பணியாளர்களைத் தனது துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டியதோடு கிளப்பையும் அடித்துநொருக்கியுள்ளார் இந்த சம்பவத்தால் கிளப்பின் 5லட்சம் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமாகியுள்ளனர் இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரஞ்சித் குமார எனப்படும் அந்த இராணுவ மேஜரை இராணுவப்பொலிஸார் கைதுசெய்துள்ளனர் நேற்றைய தினம் மவுண்ட் லாவணியா குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அந்த மேஜரை தொடர்ந்தும் மார்ச் மாதம் 10ம் திகதிவரை மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவத்துடன் மேலும் இருவர் தொர்புபட்டுள்ளதாகவும் அவர்களை தாம் தேடிவருவதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் தெரிவிக்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக