பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்க ப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் அமைச்சரவை நாட்டு க்குச் சுமையற்றதாக அமைய வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபே ட்சகர்கள் ஏகமனதாகத் தீர்மான மொன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றினர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனுராதபுரம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகர்கள் உறுதிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்படி யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை அமைச்சர் சி. பி. ரட்நாயக்கா வழிமொழிந்தார். அதனை தொடர்ந்து இந்த யோசனை ஏகமானதாக நிறை வேற்றப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக