திங்கள், 1 மார்ச், 2010

அமைச்சர் பேரியல் அஷ்ரபுக்கு அம்பாறையில் பெரு வரவேற்பு..!

அமைச்சர் பேரியல் அஷ்ரப் சு. கட்சியில் இணைந்ததை முன்னிட்டும், அவர் திகாமடுல்ல மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும் ஆதரித்து அம்பாறை மாவட்டத்தின் சிங்கள, முஸ்லிம் பிரதேசங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி வரும் பாதைகளில் பதியத்தலாவை பஸ் நிலையத்திற்கு முன்பாக சு. கட்சி பெண்கள் அணி மாலினி கமகே தலைமையிலும், மஹாஓயாவில் 49ம் கட்டையடியில் பிரதேச சபையின் உப தலைவர் தயானி தலைமையிலும் பெரு வரவேற்பளிக்கப்பட்டது.
திகாமடுல்ல மாவட்டத்தில் பாரிய சேவையை செய்துள்ள அமைச்சர் பேரியலை அதி கூடிய விருப்பு வாக்குகளை வழங்க மாவட்டத்திலுள்ள சிங்கள மக்கள் காத்துக் கொண்டிருப்பதாக மஹாஓயா பிரதேச சபையின் உபதலைவர் தயானி ஜனக்க தெரிவித்தார்.
அமைச்சர் பேரியல் மஹா ஓயாவில் ஐந்து தசாப்தங்களாக எந்த அரசியல்வாதி செய்ய முடியாத வராப்பிட்டிய பாலம், வஸ்கனிட்டுவ பாலம், வேடர் இனத்துக்கான மின் விநியோகத் திட்டம் என பல வீடமைப்புத் திட்டங்களை செய்து தந்துள்ளார்.
அவரது கணவர் அஷ்ரப் தொடக்கி வைத்த அபிவிருத்தி பணிகளையும் பேரியல் முடித்துக்கொடுத்துள்ளார் என உபதலைவர் தயானி தெரிவித்தார். அத்துடன் அன்றைய பிற்பகல் மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேசங்களில் அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக