கிளிநொச்சி மாவட்டத்தில் மிதிவெடியகற்றப்பட்டு வரும் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்மாதத்தில் 1500ற்கு மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார். நாளை மறுதினம் 19 ஆம் திகதி A-9 கிழக்குப் பிரதேச கிராமங்களில் 350 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதுடன், இம்மாதத்தில் ஐந்து கட்டங்களாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் A-9 வீதிக்கு மேற்குப்புறமாகவுள்ள உமையாள்புரம், குமாரபுரம், பரந்தன் கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் 19 ஆம் திகதி முரசுமோட்டை, கோரக்கன் கட்டு கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக