சனி, 13 மார்ச், 2010
ஜெனரல் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை காட்டுமாறு ஜே.வி.பி. கோரிக்கை..!
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள வீட்டை ஊடகங்களுக்கு காண்பிக்குமாறு ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வீட்டை ஊடகங்கள் பார்வையிட்டால் அதில் காணப்படும் வசதிகள் குறித்து விளங்கிக் கொள்ள முடியும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகா கடற்படை இல்லமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறி;த்த இல்லத்தில் வசதிகள் எதுவும் இல்லை என திருமதி அனோமா பொன்சேகா தெரிவிக்கும் அதேவேளை அரசாங்கம் சகல வசதிகளும் காணப்படுவதாக தெரிவிக்கிறது எனவே உண்மை நிலைமை அறிந்து கொள்ள ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறி;ப்பிட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக