ஞாயிறு, 7 மார்ச், 2010
அரசினதும் இணைந்துள்ள கட்சிகளினதும் இனவாதப் போக்கு தமிழ்பேசும் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது -செல்வம் அடைக்கலநாதன்..!!
அரசினதும் அதனுடன் இணைந்துள்ள கட்சிகளினதும் இனவாதப் போக்கானது தமிழ்பேசும் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளதுடன் நம்பிக்கையிழக்கவும் செய்துவிட்டது. இந்நிலையில் அரசியல்தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் விஷேடமாக இந்தியாவின் அனுசரணை அவசியமானது என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்பேசும் சமூகமும் ஓரணியில் திரண்டு நின்றால் இலங்கைக்குள் தலை விரித்தாடும் இனவாதம் என்ற பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்சமூகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசியல்தீர்வு, அதற்கான முட்டுக்கட்டைகள் மற்றும் இன்றைய தருணத்தில் இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக