வியாழன், 18 மார்ச், 2010
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன்தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் தாம் மீளவும் பேச்சுவார்த்தை நடாத்த ரணில் உத்தேசம்..!
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன்தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் தாம் மீளவும் பேச்சுவார்த்தை நடாத்த உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டம்கட்டமாக இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 2.9பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொடர்பில் மீளப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமதுகட்சி ஆட்சியமைத்தால் இந்த விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமது கொள்கைகள் தொடர்பில் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியதித்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மொத்த வருமானம் 705 பில்லியன் ரூபா எனவும், மொத்த வட்டி மற்றும் கடன் கொடுப்பனவுகள் 825பில்லியன் ரூபா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நட்பு நாடுகளிடம் கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளத் தாம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களுக்கு புறம்பானவகையில் தற்போதைய அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள வர்த்தகக் கடன்களை தமது அரசாங்கம் மீளச்செலுத்தாது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச வங்கிகளுக்கு தாம் ஏற்கனவே அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக