செவ்வாய், 16 மார்ச், 2010
தேர்தல் முறைமையில் முறையின்மை காரணமாக ஒரேகட்சிகளிடையே மோதல் ஏற்படுகிறது -விமல் வீரவன்ச..!!
தேர்தல் முறைமையின் குறைபாடுகள் காரணமாக ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் மோதிக்கொள்ள நேரிடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் இந்த தேர்தல் முறைமை எவரையும் தமது கடமைகளை சரியான முறையில் மேற்கொள்ள அனுமதிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக தேர்தல் ஆணையாளர் காவல்துறையினர் உள்ளிட்டோர் தங்களது கடமைகளை செவ்வனே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முறைமைக்கும் சட்டத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக