செவ்வாய், 16 மார்ச், 2010

பொன்சேகாவை விடுவிக்ககோரி ஆர்பாட்டங்கள். பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்..!

ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ நீதிமன்றில் இன்று விசாரணைகள் இடம்பெறுகின்ற தருணத்தில் அவரது கைது சட்டவிரோதமானது எனவும் அவரை இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனவும் வாதிடும் அவரது ஆதரவாளர்களும் , அரசியல் பங்காளிகளான ஜேவிபி யினரும் நாடுபூராகவும் இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.அதேவேளை பாணந்துறையில் இடம்பெற்ற ஆர்பாட்ட ஊர்வலத்தினை பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து கலைத்துள்ளனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்துபேரளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் 300 பேரளவில் கொழும்பு - காலி பிரதான வீதியை குறுக்கிட்ட பாதையை செயலிளக்கச் செய்ய முனைந்தாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் நாடு பூராகவும் ஏற்பாடாகியுள்ள ஆhப்hட்டங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸார் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக