செவ்வாய், 16 மார்ச், 2010

அனைத்தையும் இழந்து போய் உள்ள எமது சமூகத்தையும் அவர்களின் வளத்தையும் பாதுகாக்க புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்வர வேண்டும் -ஈபிஆர்எல்எப் தலைவர்

நெலிந்து மெலிந்து அனைத்தையும் இழந்து போய் உள்ள எமது சமூகத்தையும் அவர்களின வளத்தையும் பாதுகாக்க புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் பொதுச்செயளாலரும் அக்கட்சியின் யாழ் மாவட்டத்தின் தலைமை வேட்பாளருமான தோழர் சிறிதரன் சுகுமார் ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது உருக்கமான வேண்டுகோள் ஒன்றை புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு விடுத்துள்ளார். கடந்த யுத்த காலங்களின் போது இம் மக்களின் நன்மை தீமைகளில் அம் மக்களுடன் மக்களாக நின்ற பணியாற்றியவர்களை மக்கள் இனம் கண்டு கொள்ளுவார்கள் கடந்த தேர்தலின் போது இம்மக்களால் தெரிவு செய்யபட்ட 22 பாரளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் குடும்பங்களை வெளிநாட்டில் குடியேற்றி விட்டு உலகம் எல்லா பயணங்களை மேற்கொண்டு விட்டு தேர்தல்காலங்களில் மட்டும் மக்களின் நன்மை தீமைகளை பற்றியும் தன்னாட்சி சுயநிர்ணயம் பற்றி பேசுவதையும் எம்மக்கள் நன்கு உணர்ந்து உள்ளதோடு அவர்களை இனங்கண்டு உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கியதை கவனத்தில் கொள்ளபட வேண்டும் அது சாதியரீதியாகவும் உரிமைகளை இழந்து நிற்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும் பேசபட வேண்டும் அதைவிடுத்து தேர்தல் காலங்களில் அதை தமிழ் தேசியம் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய இனைந்து வடகிழக்கு மகாணத்தை இணைத்து ஒரு மhகாணசபை ஆட்சியை உருவாக்கிய போது அதனை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று வடகிழக்கு இணைப்பை பற்றியும் சுயநிர்ணய உரிமையை பற்றியும் பேசுகிறார்கள் எனவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி செயலாளர் தோழர் சிறிதரன் சுகுமார் குறிப்பிட்டார்.எமது போரட்டத்தில் செல்லென்னா துயரங்களை அனுபவித்த எமது மக்கள் உடன் பிறப்புகளை இழந்துள்ளார்கள் பல இளைஞர் யுவதிகள் என ஆயிரக்கானனோர் இலட்சியத்திற்க்காக தாங்களின் உயிர்களை அர்ப்பணித்தார்கள் அவர்களின் அடையாளங்கள் இப்பொழுது அழிக்கப்பட்டு உள்ளது அவர்களின் இலட்சியத்திலும் தியாகத்திலும் உலகவலம் வந்தவர்களும் உல்லாச வாழ்க்கை வாழந்தவர்களும் மன்னாரங்கம்பனி நடாத்தியவர்களும் தமிழ் தேசியத்தின் பெயரால் இப்பாரளுமன்ற தேர்தலிலே போட்டியிடுவதை மக்கள் இனம் கண்டு உள்ளார்கள்இப்பொழுது எமது மண்ணிலே ஒரு லட்சத்து ஜம்பதுனாயிராம் பெண்கள் வாழ்வையிழந்து விதவைகளாகவும் எழுபத்தைந்தாயிரம் இளைஞர்கள் ஊனம் அற்றவர்களாகவும் இங்கு உள்ளார்கள் இவரைகளை பற்றியெல்லாம் சிந்திக்காமால் வண்ணபேஸ்டர்களை ஒட்டி மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள் தமிழ்தேசிய வியாபாரிகள் இவர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவு செய்யும் பணத்தில் ஒரு வீதமாவது வன்னியில் அகதிகளாக உள்ளவர்களுக்கு செலவு செய்வார்களாயின் அந்த மக்கள் திருப்தியுடன் வாழ்வார்கள் எனவும் குறிப்பிட்டார்முற்போக்கு சிந்தனையுடன் செயற்படும் ஒரு கட்சி என்ற ரீதியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -பத்மநாபா அணி என்ற வகையில் சிறுபான்மை தமிழர் மகாசபையின் செயற்பாடுகளை ஒரு புரிந்துணர்வுடன் பார்ப்பதாக குறிப்பிட்ட அவர் சிறுபான்மை தமிழர்களுக்காக கடந்த காலங்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி பல போரட்டங்களை நடாத்தியதையும் சுட்டி காட்டினார் இத்தேர்தலில் சிறுபான்மை தமிழர் மகாசபையுடன் அல்லது இடதுசாரிகளுடன் ஒரு உடன்பாட்டிக்கு வரமுடியாமால் போனமை ஒரு வேதனையான விடயம் என குறிப்பிட்ட அதேவேளை தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்துடன் முழுமையான இணக்கத்துடன் செயற்படுவதாகவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா அணி செயலாளர் தோழர் சிறிதரன் சுகுமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக