புதன், 3 மார்ச், 2010

அவசரகால சட்டத்தை நீடிக்க ஜனாதிபதி கைச்சாத்து..!!

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான வர்த்தமாணி அறிவித்தலில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்காக பாராளுமன்றம் மார்ச் 9 ஆம் திகதி விசேடமாக கூடவுள்ளது. பாராளுமன்றம் கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி கலைக்கப்பட்டது. இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதால் அடுத்த வாரம் பாராளுமன்றம் விசேடமாகக் கூட்டப்பட்டு பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்புக் கருதி 1983 ஆம் ஆண்டு இந்த அவசரகாலச் சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட்டது. அது முதல் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே அது நீடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக