புதன், 3 மார்ச், 2010
வவுனியா நெளுக்குளம் தடுப்பு முகாமிலிருந்து 100 இளைஞர்கள் பூஸாவுக்கு மாற்றம்..!
வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்பக்கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர் இவர்களின் பெயர் விபரங்கள் இன்று புதன்கிழமை முதல் யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 100பேர் பூஸா தடுப்பு முகாமிற்கு கடந்த 26ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு கிளிநொச்சி 35, யாழ்ப்பாணம்26, முல்லைத்தீவு13, வவுனியா15, மன்னார்07, மட்டக்களப்பு03, திருகோணமலை01 இவ்வாறு பூஸா முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை இன்று தொடக்கம் யாழ்மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பார்வையிடலாம் என இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார். இதேவேளை வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து பூஸா முகாமிற்கு மாற்றப்பட்ட 104 பெண்களின் விபரங்களையும் யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் மக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக