வெள்ளி, 19 மார்ச், 2010
ஜப்பானில் பணி புரிந்த தூதரக அதிகாரி மீது ஒழுக்காற்று விசாரணை: அமைச்சர் ரோஹித போகொல்லாகம..!
ஜப்பானுக்கான இலங்கை தூதரகத்தில் பணி புரிந்த உயர் தூதரக அதிகாரி ஒருவர் நிதி முறைகேட்டில் தொடர்பு பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதி ராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறினார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், குறித்த அதி காரி தனது ஒப்பந்தக் காலம் முடிந்து நாடு திரும்பியுள்ளார். ஆனால் இவர் கடமையில் இருந்த போது நிதி தொடர் பான முறைகேட்டில் ஈடுபட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. ஜப்பான் பதில் தூதுவருக்கு இது குறித்து விசாரணை நடத்தப்பணித்துள்ளேன். மூன்று தினங்களில் இடைக்கால அறிக்கை கிடைக்க உள்ளது என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக