வெள்ளி, 19 மார்ச், 2010
பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயம் 22ம்திகதி திறக்கப்படுகிறது..!
பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயம் இம்மாதம் 22ம்திகதி மீண்டும் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் கும்பாபிசேகம், பிராயசித்த அபிசேகம் என்பன நடைபெற உள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர். அண்மையில் ஆலய பரிபாலன சபையினர் உதவி அரசாங்க அதிபர் சகிதம் இந்த ஆலயத்தைச் சென்று பார்வையிட்டதாகவும் இதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சென்றவாரம் முதல் வற்றாப்பளைப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக