ஞாயிறு, 7 மார்ச், 2010

ஜெனரல் பொன்சேகா சாகும்வரை உண்ணாவிரதம்..!

இராணுவப் பொலிஸாரினால கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடுகளில் இருக்கும் தனது மகள் மாருடன் பேசுதற்கான உரிமை வழங்கப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர், தடுப்புக்காவலில் உள்ள ஒருவருக்கு தொலைபேசி வசதிகளை வழங்குவது என்பது மேலதிக சலுகையாகும். இலங்கை இராணுவம் இதைச் செய்யவேண்டும் என கடமைப்படவில்லை. எமக்கு எவ்வித நீதிமன்ற உத்தரவுகளோ அன்றில் உயர்மட்ட அறிவுறுத்தல்களோ கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக