வியாழன், 4 மார்ச், 2010

முட்டாள்கள் நிறைந்த சபையில் முடிவுகள் எடுப்பது சிரமம் என்பது பிள்ளையானுக்கு தெரியாதோ என்கின்றனர் கருணாஅம்மான் தரப்பினர்..!

கடந்த ஜனாதிபரி தேர்தலில் ஜனாதிபரி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு தேடி பிள்ளையான் கல்குடா தொகுதி சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயத்தில் த.ம.வி.பு கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் ஜூடி ஆட்சி மாற்றத்தை வேண்டி பொன்சேகாவுக்கு ஆதரவு தேடி அன்னத்துக்கு புள்ளடி போடுங்கள் என்று ஊர்ஊராக மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள். மாதர்சங்கங்கள்; மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனும் தன்னுடன் கூட்டிச்செல்லும் குண்டர்களை ஏவி அடிதடி சண்டையில் ஈடுபட்டது ஊரறிந்த விடயம் எனவும் இதுகுறித்து பொலிஸ் முறைப்பாடும் உண்டு எனவும் தோப்புர்-பள்ளிக்குடியிருப்பு பாடசாலைக்கு சென்ற ஜூடி தையல்பயிற்சி கற்றவர்களுக்கு தையல்உபகரனம் வழங்கவுள்ளோம் என நயவஞ்சகமாக கூறி இளைஞர் யுவதிகளை வரவழைத்தும் மூதூர்-பட்டித்திடல் பகுதிக்கு சென்ற ஜுடி விதவைகளுக்கு பணம் வழங்கவுள்ளோம் என நயவஞ்சகமாக கூறி வரவைத்த விதவைகளிடம் அன்னத்துக்கு புள்ளடி போடுங்கோ என கூறிய ஜுடி போன்ற பல முட்டாள்களை வைத்திருக்கும் பிள்ளையான் எப்படி சரியான முடிவுகளை எடுப்பது எனவும் இப்போ எமது மக்கள் ரொம்பவும் தெளிவா யோசிக்ராங்க! கரெக்டா முடிவெடுப்பாங்க! இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் கருணாஅம்மான் தரப்பினர் அதிரடி இணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக