திங்கள், 10 நவம்பர், 2014

சந்திரிக்கா தேர்தலில் போட்டியிட சட்டச் சிக்கல்கள்..!!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிடுவதற்கு பல சட்டசிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில் கரு ஜயசூரியவை பொதுவேட்பாளராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பலர் இணக்கம் வெளியிட்டாலும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவரும் கட்சியின் முன்னாள் தவிசாளருமான மலிக் சமரவிக்கிரம அதனை எதிர்க்கிறார்.

இதேவேளை சந்திரிக்கா பொதுவேட்பாளராக போட்டியிடுவதானால் அவருக்கு வோட்டர் எட்ஜ் ஊழல் வழக்கில் அவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 3 மில்லியன் ரூபாவை அபராதமாக செலுத்திய குற்றச்சாட்டு உள்ளது.


அத்துடன் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாமென்று குடும்பத்தினரும் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக