திங்கள், 10 நவம்பர், 2014

விக்னேஸ்வரனின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளத் தேவையில்லை டக்ளஸ் தேவானந்தா..!!

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளத் தேவையில்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.
வடக்கில் இராணுவத்தினர் குற்றம் இழைப்பதாக கூறுவதில் உண்மையில்லை.

சில குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு முன்வைக்கப்படுகின்றது.
இதனால் வடக்கு முதலமைச்சரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
விக்னேஸ்வரன் கடந்த காலங்களிலும் இவ்வாறான கருத்துக்களைவெளியிட்டுள்ளார். அது அவரது இயல்பான பண்பாகும்.
ஆளும் கட்சியில் இருப்பதனால் இவ்வாறு கூறவில்லை.

வடக்கு அபிவிருத்திக்காக வட மாகாணசபைக்கு அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது.


இந்தப் பணத்தில் 27 வீதமான பணத்தை மாகாணசபை செலவிட்டுள்ளது.
சமாதானம் காரணமாக யாழ்ப்பாண மக்களுக்கு ஹம்பாந்தோட்டையிலும், ஹம்பாந்தோட்டை மக்களுக்கு யாழ்ப்பாணத்திலும் வாழ சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமை கிடையாது என சிலர் குறிப்பிட்டாலும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில்நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக