வியாழன், 4 மார்ச், 2010
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாண சேவைகள் அமைச்சின் இரு அலுவலகங்கள்..!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் பணிகளை இலகுபடுத்தும் வகையில் மாங்குளத்திலும், மாந்தை கிழக்கு மக்களின் பணிகளுக்கென பாண்டியன்குளத்திலும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாண சேவைகள் அமைச்சின் இரு அலுவலகங்கள் நேற்று (2010.03.03) மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் திறந்து வைக்கப்படடுள்ளது. முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்ணம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இ;வ்விரு அலுவலகங்களையும் திறந்து வைத்தார். இதேவேளை துனுக்காயில் 2718 குடும்பங்களைச் சேர்ந்த 6787 பேரும், பாண்டியங்குளத்தில் 2666 குடும்பங்களைச் சேர்ந்த 6216 பேரும், ஒட்டுச்சுட்டானில் 217 குடும்பங்களும் மீளக்குடியர்த்தப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரங்களில் மல்லியாவளயில் 16 கிராம சேவகர் பிரிவில் மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். மல்லாவி மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன், பாடசாலைக்கான போதிக்கும் ஆசிரியர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் என்பனவற்றை உடன் பெற்றுக் கொடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக