புதன், 3 மார்ச், 2010
தேர்தல் முடியும்வரை காத்திராது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க..!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் காத்திருக்காமல் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார். தேர்தலின் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைக்க முடியுமாயின் தேர்தல் வரையில் காத்திராது அமைச்சர்களின் எண்ணிக்கையை தற்போதே குறைக்க முடியும் என அவர் தெரிவித்ததுள்ளார். புத்தளத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தள்ளார். அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மூன்றுகோடி ரூபா சேமிக்க முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா இவ்வாறான ஓர் செயற்பாட்டினை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக