வியாழன், 28 ஜனவரி, 2010

மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் அகழ்வுக்கான ஆய்வு நடவடிக்கை!

மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் அகழ்வுக்கான ஆய்வு நடவடிக்கைகளை அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனமொன்றின் ஊடாகவே இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக குறித்த கடல் எல்லையின் கடல்சூழல் மற்றும் அலையின் வேகம் ஆகியன தொடர்பாக ஆராயப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பரீட்சார்த்தமாக மூன்று கிணறுகளை தோண்டுவதற்கு குறித்த இந்திய நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இதனடிப்படையில் 3000 சதுர கிலோமீற்றர் கடற்பரப்பில் முதற்கட்ட கனிய எண்ணெய் அகழ்வுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக