புதன், 17 மார்ச், 2010
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி பிரித்தானியாவில் அரசியல் கட்சியாக பதிவு..!
புலிகளின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல்கட்சி தொடர்பாகப் பேசிய திரு.என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்றதான கண்ணோட்டம் பிரித்தானியாவில் மறையும்காலம் உருவாகி இருக்கினறகது என்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி பிரபாகரனால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயதப் போராட்டம் அக்கட்சியின் தேவையை சிறிதுகாலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது. தற்பொழுது ஆயுதங்கள் மௌணித்துள்ள நிலையில் இக்கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனின் காண்பித்த பாதையில் எமது மக்களின் விடுதலைக்காண பயணத்தை நாம் தொடர இருக்கின்றோம். எமது மக்களின் விடுதலைக்காக போராடிவரும் மற்றைய புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் எமது போராட்டத்தை முன்கொண்டு செல்வோம் என்று திரு. பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்துள்ளார். புலிச்சின்னமே தமது கட்சியின் சின்னமாக பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதாகவும், புலிக்கொடியேற்றப்பட்ட தமது கட்சி அலுவலகம் Unit G11, Lombard Business Park2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP என்ற விலாசத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக